×

கடிக்க எதுவும் கிடைக்காமல் ரூ.1.5 லட்சம் வைரத்தை விழுங்கிய நாய்க்குட்டி

புனே: குழந்தைகளுக்கு பல் முளைக்கும் சமயத்தில் எதைக் கண்டாலும் வாயில் எடுத்து வைத்து கடித்துக் கொண்டே இருப்பதை பார்த்திருப்போம். அதுபோலத்தான் நாய்க்குட்டிகளும். அதன் பற்கள், பிறந்து 8 வாரத்தில் வளரத் தொடங்கி், 6-7 மாதத்தில் வளர்பருவத்தை அடைந்து விடும். அந்த சமயம், குழந்தைகளைப் போலவே நாய்க்குட்டிகளும் எதைக் கண்டாலும் விடாது. அப்படித்தான், புனேவில் ஒரு வீட்டில் கடிக்க எதுவும் கிடைக்காமல், இரண்டு வைரக்கற்களை நாய்க்குட்டி விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது. அந்த வீட்டில் சம்பவத்தன்று, 2 வைரக்கற்கள் காணாமல் குடும்பத்தினர் அனைவரும் தேடி உள்ளனர். அந்த கற்களின் மதிப்பு ₹1.5 லட்சம்.

அப்போதுதான் அவர்கள் தங்களின் செல்ல நாய் குட்டியை உற்று பார்த்துள்ளனர். அது எல்லாவற்றையும் வாயில் கடிப்பதை பார்த்ததும் சந்தேகமடைந்து கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றனர். லேப்ராடர் இனத்தை சேர்ந்த அந்த 6 மாத நாய் குட்டி வயிற்றில் வைரக்கற்கள் இருப்பதை கண்டறிந்த டாக்டர், கேஸ்டிரோஸ்கோப்பி செய்து நாயின் செரிமானப் பகுதியில் இருந்த வைரக்கற்களை வெளியே எடுத்தார். வைரக்கற்கள் மட்டுமின்றி நாயின் வயிற்றில் இருந்து ஒரு ஊசி, 2 கோட் பட்டன்கள், ரப்பர் ஒயர், சில நூல்களும் எடுக்கப்பட்டன. இத்தனையையும் அந்த நாய் விழுங்கி உள்ளது. வைரங்களை நாய் குட்டி விழுங்கியதை, அந்த குடும்பத்தினர் சீரியசாக நினைக்கவில்லை. நாலு போடு போடலாம் என கோபப்படவும் இல்லை. ‘எங்களுக்கு இந்த வைரங்களை விட, எங்கள் செல்லம்தான் பெரியது,’ என்கின்றனர் அவர்கள்.

Tags : Bite, ru. 1.5 lakh diamonds, swallowed, puppy
× RELATED பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கலை...